• Nov 06 2024

நிறைமாத கர்ப்பிணியை வெறுப்பேற்றிய கணவர்.. கன்னத்தில் ஒன்னு போட்ட அமலாபால்.. அதிர்ச்சி வீடியோ..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகை அமலாபால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவரை வெறுப்பேற்றும் வகையில் அவரது கணவர் நடந்து கொண்ட நிலையில் அவரது கன்னத்தில் அமலாபால் ஒன்று போட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அஜித், விஜய் உட்பட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்த அமலா பால் தற்போது நடிப்பதை குறைத்துக் கொண்டார் என்பதும் குறிப்பாக அவர் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் நடிப்பதை நிறுத்தி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அவர் ஏற்கனவே நடித்த படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதும் சமீபத்தில் ’ஆடு ஜீவிதம்’ என்ற திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில் அடுத்ததாக ‘லெவல் கிராஸ்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த நிலையில் தற்போது நடிகை அமலாபால் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் கர்ப்ப கால புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். கர்ப்ப நேரத்தில் தனது கணவர் தனக்கு உறுதுணையாக இருந்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்து வருகிறார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன் அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைமாத கர்ப்பிணியாக உட்கார்ந்து இருக்கும் நிலையில் அவரது கணவர் அவரை வெறுப்பு ஏற்றும் வகையில் நடந்து கொண்ட போது ஒரு கட்டத்தில் பொறுத்து பார்த்த அமலாபால் தனது கணவரின் கன்னத்தில் செல்லமாக அடிக்கும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோவுக்கு ’க்யூட் தம்பதிகள்’ என்றும் ’டெலிவரி எப்போது’ என்றும் ’நீங்கள் எப்போதும் இதே போல் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்’ என்றும் ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement