இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா என்பவரது இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா லீட் ரோலில் நடித்த திரைப்படம் தான் அன்னபூரணி. இப்படத்தில் நயன்தாராவுடன் ராஜா ராணி படத்தில் நடித்த சத்யராஜ், ஜெய் உள்ளிட்ட பிரபலங்களும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இவர்களுடன் கே.எஸ். ரவிக்குமார்,கார்த்திக் குமார் சுரேஷ் சக்கரவர்த்தி, காந்தாரா வில்லன் அச்யுத் குமார் என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் நேற்றைய தினம் வெளியாகியிருந்த இப்படம் எப்படி இருக்கு என்று தற்பொழுது பார்க்கலாம்.
படத்தின் கதைக்களம்
ஸ்ரீரங்கம் ஐயங்கார் குடும்பத்தை சேர்ந்த ரங்கராஜன்(அச்யுத் குமார்) பி.இ. படித்தும் ரயில்வே வேலை வேண்டாம் என கடவுளுக்கு சேவை செய்ய ரங்கநாதர் கோவிலில் பிரசாதம் செய்யும் சமையல் கலைஞராக இருக்கிறார். அவரின் மகள் அன்னபூரணி(நயன்தாரா). சிறு வயதில் இருந்தே சமையல் மீது ஆர்வம் கொண்ட அன்னபூரணிக்கு தான் பெரிய சமையல் கலைஞராக வேண்டும் என்று ஆசை.
ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்த நாம் மாமிசத்தை தொடுவது பாவம் என்கிறார் அப்பா. ஆனாலும் அன்னபூரணிக்கு சமையல் கலைஞராகும் ஆசை விடவில்லை. எம்.பி.ஏ. படிக்கப் போகிறேன் என்று கூறிவிட்டு ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கிறார் அன்னபூரணி.
இந்தியாவின் பிரபலமான சமையல் கலைஞரான ஆனந்த் சுந்தர்ராஜன்(சத்யராஜ்) தான் அன்னபூரணிக்கு ரோல் மாடல். அப்பாவின் ஆச்சாரம், தனது கனவுக்கு இடையே சிக்கிக் கொள்கிறார் அன்னபூரணி. இந்த நேரத்தில் தான் அவரின் நண்பரான ஜெய் அறிவுரை வழங்குகிறார்.தான் ஆசைப்பட்டது போன்று கார்பரேட் ஷெஃப் ஆனாாரா இல்லையா என்பதே அன்னபூரணி என்பதே கதை.
படம் பற்றிய அலசல்
ஒரு பிராமண பெண் தன் கனவுக்காக மாமிசத்தை தொட்டால் என்ன பிரச்சினை வரும் என்பதை இப்படம் எடுத்துக் காட்டுகின்றது. அதனை நடிகை நயன்தாரா சிறப்பாக நடித்துக்காட்டியுள்ளார்.
படம் என்று ஒன்று இருந்தால் வில்லன் என்று ஒருவர் வேண்டும் என்பதற்காக கார்த்திக் குமார் வருகிறார். அன்னபூரணி, கார்த்திக் குமார் மோதலில் சுவாரஸ்யம் குறைவு. அழகாக தெளிவாக யோசித்து அதை திரையில் காட்டும்போது சொதப்பிவிட்டார் இயக்குநர்.
மேலும் இப்படத்தை தன் தோள்களில் நடிகர் சத்தியராஜ் தாங்கியுள்ளார் எனலாம். இவரின் நடிப்பும் இப்படத்தில் கச்சிதமாக உள்ளது.அன்னபூரணிக்கு அறிவுரை வழங்கி ஊக்குவிப்பதை தவிர ஜெய்க்கு வேறு எந்த வேலையும் கொடுக்கவில்லை இயக்குநர்.
பல விஷயங்களை பேச நினைக்காமல் ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கலாம் நிலேஷ் கிருஷ்ணா. படத்தின் நீளமும் ஒரு மைனஸாகிவிட்டது. கொஞ்சம் நீளத்தை குறைத்திருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!