• Jun 16 2024

வெற்றிமாறன் என்றாலே தெறித்து ஓடும் ஹீரோக்கள்? ‘வாடிவாசல்’ டிராப்பா?

Sivalingam / 3 weeks ago

Advertisement

Listen News!


இயக்குனர் வெற்றிமாறன் தற்போது ’விடுதலை 2’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தனது அடுத்த படம் ‘வாடிவாசல்’ என்று கூறியிருந்தாலும் அந்த படம் ஆரம்பிப்பதற்கான எந்தவிதமான அறிகுறியும் இல்லை என்று கூறப்பட்டு வருகிறது.

‘வாடிவாசல்’ திரைப்படத்தில் முதலில் சூர்யா நடிக்க இருந்த நிலையில் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்தது என்பதும் ஜல்லிக்கட்டு காளை இடம் சூர்யா பழகும் சம்பவமும் நடந்தது என்பது தெரிந்தது. ஆனால் இந்த படத்தில் அமீர் இணைவதாக வெற்றிமாறன் அறிவித்ததும் சூர்யா இந்த படத்தில் நடிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டதாகவும் அமீர் மற்றும் சூர்யா குடும்பத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை தான் இதற்கு காரணம் என்றும் வதந்திகள் பரவின.

இந்த நிலையில் ‘வாடிவாசல்’ படத்தில் அமீர் நடிப்பது உறுதி என்று வெற்றிமாறன் கூறிவிட்ட நிலையில் தான் அந்த படம் வேண்டாம் என்று கூறிவிட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யா நடிக்க சென்றுவிட்டார் என்றும் அவர் திரும்பி வரவே கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து சூர்யாவுக்கு பதிலாக ராம்சரண் தேஜா, விஜய் சேதுபதி உள்ளிட்ட ஒரு சில நடிகர்களிடம் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க வெற்றிமாறன் அணுகியதாகவும், ஆனால் வெற்றிமாறன்   படத்தில் நடிக்க யாரும் ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் வெற்றிமாறன் ஒரு படத்தை இரண்டு வருடங்கள் இழுப்பார் என்றும் அது மட்டும் இன்றி அமீர் படத்தில் இருப்பதை சில ஹீரோக்கள் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது ‘வாடிவாசல்’ திரைப்படம் கிட்டத்தட்ட டிராப் என்று திரையுலக வட்டாரங்கள் கூறி வருகின்றன.

Advertisement

Advertisement