• Sep 29 2024

அல்லு அர்ஜுன் , அட்லீ காம்போ ட்ராப்பா? மறுபடியும் பாலிவுட் நடிகர்தான் ஹீரோ!

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

பல்வேறு நடிகர்கள் பல்வேறு விதமான கதைகளில் திரைப்படங்களை எடுத்தாலும் குறிப்பிட்ட ஒருசில திரைப்படங்கள் மூலமாக மாத்திரமே முன்னணியாக மாறுபவர்கள் உள்ளனர். அவ்வாறானவரே இயக்குனர் அட்லீயும் ஆவார்.


தளபதியின் தீவிர ரசிகர் இவர் என்பதனாலேயே விஜய் நடிப்பில் தெறி திரைப்படத்தின் மூலம் ஹிட் கொடுத்த இவர் தொடர்ந்து மெர்சல் , பிகில் போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ்நாட்டின் முன்னணி  இயக்குனர்களில் ஒருவராக மாறினார்.இவ்வாறு யிருந்த இவர் இந்திய அளவில் பிரபலமானது ஷாருக்கான் நடித்த  ஜவான் திரைப்படத்தின் மூலமே ஆகும். 


இவ்வாறு இருக்கையிலேயே ஜவானின் வெற்றியை தொடர்ந்து இவரது அடுத்த திரைப்படத்துக்கான எதிர் பார்ப்பு அதிகரித்துள்ளது. அல்லு அர்ஜூனுடன் இணைந்து ஒரு படம் செய்வதாக தகவல் வெளியாகிய நிலையில் தற்போது  சல்மான் கான் மற்றும் அட்லீ இணைய போவதாகவும் குறித்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க போவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement