திரை உலகை பொறுத்தவரை அஜித்
மிகவும் எளிமையானவர் என்றும் தற்புகழ்ச்சி விரும்பாதவர் என்றும் குறிப்பாக தனது ரசிகர்களை வைத்து
காரியம் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்
என்பது தெரிந்தது. கிட்டத்தட்ட அதே போல் தான்
விராட் கோலி இருப்பதாகவும் இருவருக்கும்
இடையே அபூர்வ ஒற்றுமைகள் சில இருப்பதாகவும் கூறப்படுவது
ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
அஜித் ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாக
தோல்வி படங்கள் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் கால்பந்து வீரர் ரொனால்டோவை உதாரணமாக எடுத்து கொண்டு தனது சில பழக்க
வழக்கங்களை மாற்றி கடின உழைப்பை பின்பற்றி
அதன் பின் வெற்றி படங்களை
கொடுத்து வருகிறார்
அதேபோல் தான் விராட் கோலி
ஆரம்பத்தில் நன்றாக விளையாடினாலும் இடையில் சில சறுக்கல்கள் அவருக்கு
ஏற்பட்ட போது ரொனால்டோவை உதாரணமாக
கொண்டு தான் அவரும் கடின
உழைப்பை பின்பற்றியதாக கூறப்படுகிறது. எனவே அஜித், விராத்
கோலி இருவருக்குமே ரோல் மாடல் ரொனால்டோ
தான்.
மேலும் அஜித்துக்கு தற்புகழ்ச்சி என்பது சுத்தமாக பிடிக்காது என்றும் தன்னுடைய ரசிகர்களோ மற்றவர்களோ அவரை புகழும் போது
அவர் அதை வேண்டாம் என்று
ஒதுக்கி விடுவார். குறிப்பாக அல்டிமேட் ஸ்டார், தல, நாளைய சூப்பர்
ஸ்டார் போன்ற பட்டங்கள் எதுவும் எனக்கு வேண்டாம் என்றும், அஜித் அல்லது ஏகே என்று தன்னை
அழைத்தால் போதும் என்று அவர் ஒரு அறிக்கையை
வெளியிட்டு இருந்தார்
இதே பார்முலாவை தான் தற்போது விராத்
கோலியும் பயன்படுத்துகிறார். தன்னை கிங் என்று ரசிகர்கள்
அழைத்துக் கொண்டு வந்த நிலையில் சமீபத்தில்
அவர் ஒரு நிகழ்ச்சியில் மேடையிலேயே
தயவுசெய்து என்னை கிங் என்று அழைக்க
வேண்டாம், விராட் கோலி என்று அழைப்பதையே
நான் விரும்புகிறேன் என்று கூறினார்
பதவி பட்டம் என அனைத்தையும் விரும்பாமல்,
எளிமையான வாழ்க்கை வாழ்வது ரசிகர்களை தன்னுடைய சுயநலத்திற்காக பயன்படுத்தாமல் இருப்பது, அனைவருக்கும் ரோல் மாடலாக இருப்பது
ஆகிய குணங்கள் அஜித் மற்றும் விராட் கோலி இடையே இருக்கும்
அபூர்வ ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது.
Listen News!