கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல், அஜித்தின் அடுத்த மூன்று படங்களை இயக்க இருக்கிறார் என்றும் அதில் ’கேஜிஎப் 3 ’படத்துடன் கனெக்சன் ஆகும் ஒரு படம் என்றும் கூறப்பட்டது. இதனால் பிரசாந்த் நீல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக இன்று காலை முதல் ஒரு செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இதுகுறித்து விசாரித்தபோது இது முழுக்க முழுக்க வதந்தி என்பது தெரியவந்துள்ளது. பிரசாந்த் நீல் இயக்க உள்ள அடுத்த மூன்று படங்கள் குறித்த பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான் என்றும் ஆனால் அந்த படங்கள் அஜித்துடன் அல்ல என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கும் ஒரு படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க இருப்பதாகவும், இன்னொரு படத்தில் ராம்சரண் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. இந்த இரண்டு படங்களையும் ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. மேலும் மூன்றாவது படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ என்றும் இந்த படத்தில் சிரஞ்சீவி நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மொத்தத்தில் இன்று காலை முதல் பரபரப்பாக வெளியான அஜித் - பிரசாந்த் நில் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் வதந்தி என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Listen News!