• May 13 2024

விஜய்யை அடுத்து அஜித்தா..?வெளியான சுவாரஸியமான தகவல்…மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தற்போது விஜய்யின் 'வாரிசு' பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார். இந்தப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 67' படத்தில் விஜய் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளதாக சமீபத்தில் லோகேஷ் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் 40 வயது கேங்ஸ்டர் பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இந்தப் படம் குறித்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளதாகவும், தான் படத்தின் ஸ்கிரிப்டைத் தயாரிக்கத் தொடங்கி விட்டதாகவும் லோகேஷ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இதனிடையே விஜய்யை அடுத்து தல அஜித்தை இயக்கவும் தான் விரும்புவதாக லோகேஷ் தெரிவித்துள்ளார். கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான விஜய்யை இரண்டாவது முறையாக இயக்கும் லோகேஷ் அடுத்ததாக அஜித்தை இயக்கினால் அந்த காம்பினேஷன் எப்படி இருக்கும் என்று இப்போதே ரசிகர்கள் யோசிக்கத் தொடங்கி விட்டனர்.

இதுவரை 'மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம்' என நான்கு படங்களை மட்டுமே இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் விஜய்யை தன்னுடைய 100 சதவிகித ஸ்டைலில் இயக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளது தளபதி 67 படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. அத்தோடு அஜித்தையும் இயக்கவுள்ளது அஜித் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement