• Jan 19 2025

அண்ணாமலை வீட்டுக்குள் புகுந்த திருடன்.. முத்து பிடித்த பின் ஏற்பட்ட அதிர்ச்சி..! புதிய ப்ரோமோ..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் அவ்வப்போது ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன்னர் ஒரு புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோவில் என்ன இருக்கிறது என்பதை தற்போது பார்ப்போம்.  

ஸ்ருதி தனது கணவன் ரவிக்கு வித்தியாசமான உடையை போட்டு அணிந்து இந்த உடையோடு நீ கிச்சனுக்கு போய் எனக்கு டீ போட்டுக் கொண்டு வா என்று கூறுகிறார். அப்போது ரவி நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் நைசாக கிச்சனுக்கு சென்ற நிலையில் திடீரென விஜயா அங்கு வந்து யாரோ திருடன் புகுந்து விட்டதாக நினைத்து கிச்சன் கதவை பூட்டிவிட்டு எல்லோரையும் கூப்பிடுகிறார்.

இதனை அடுத்து அண்ணாமலை, முத்து, மீனா, ரோகிணி, மனோஜ் ஆகியோர் கிச்சனுக்கு வந்துள்ள நிலையில் முத்து கதவை திறந்து ரவியை இழுத்து வருகிறார். ரவி முகத்தை துணியால் மூடி உள்ளதால் யார் என்று தெரியாமல் இருக்க அதன் பின்னர் எல்லோரும் சேர்ந்து முகத்தை உள்ள துணியை நீக்க, ரவி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். உடனே விஜயா ’ரவி நீயே நீ ஏன் இங்க இருக்கிறாய் என்று கேட்பது உடன் அந்த ப்ரமோ வீடியோ முடிவுக்கு வந்துள்ளது. இந்த காட்சிகள் நாளைய எபிசோடில் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’சிறகடிக்க ஆசை’ சீரியலை பொருத்தவரை காமெடி, சென்டிமென்ட், சீரியல் என மாறி மாறி வந்து கொண்டிருப்பதால் தான் இந்த சீரியல் அனைத்து தரப்பினர்களுக்கும் பிடிக்கும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement