• Jan 19 2025

என்ன கட்டிபிடிக்கலாமான்னு கேட்டாங்க ! ஸ்டார் படம் வெற்றி குறித்து உருக்கமாக அறிக்கை வெளியிட்ட இயக்குனர்!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

அடுத்த சிவகார்த்திகேயன் என அழைக்கப்படும் கவினின் டாடா திரைப்படத்தின் வெற்றிக்கும் பின்னர் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகிய திரைப்படமே ஸ்டார் ஆகும். பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இயக்கிய இலன் இயக்கத்தில் வெளியாகிய இந்த திரைப்படம் கலவையாகின விமர்சனங்களுடன் வெற்றிநடை போடுகின்றது.


இதனை தொடர்ந்தே இதன் இயக்குனர் இலன் உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "முதல் நாள் காட்சியில், முகம் அறியா சகோதரன் ஒருவன் ஓடி வந்து கேட்டான் : உங்கள கட்டி புடிச்சுக்கலாமா ? அந்த இரு கணம் அன்பு மட்டுமே வெளிப்பட்டது. ஓர் கணவனும் மனைவியும், திரையரங்கை விட்டு விலகவே இல்லை. தேம்பி தேம்பி அழுதாள், நானும் அழுதேன் . அந்த கண்ணீரும் அன்பே. திரையரங்கை சுத்தம் செய்யும் பணி பெண், கன்னத்தை பிடித்து சுத்திப்போட்டது என் தாயின் அன்பை வெளிப்படுத்தியது. பல இடங்களில் கைதட்டலும், கரகோஷமும் "லவ் யூ" என்று சொல்வதாகவே தோன்றியது . இறுதிக்காட்சியின் வரவேற்பு என்னுள் உள்ள எழுத்தாளனை இன்னும் தைரியசாலியாக மாற்றியுள்ளது. ரோலிங் கிரெடிட்ஸ் போட்டவுடன் எழுந்து செல்வதே வழக்கம். ஆனால், நான் கண்டதோ காதலியை விட்டு பிரிந்து செல்ல மனமில்லாத காதலர்களைதான். ஒரு சில [ பல ] விமர்சனங்கள், நான் ஒரு கலைஞனாய் மெருகேற உதவுகிறது. நம்பிக்கைக்கு நன்றி . கூட்டம் அலைமோதுகிறது . பகலிலும், மதியத்திலும், இரவிலும் சிலரின் கனவிலும் ஸ்டார் ஒளிர்கிறது. என குறிப்பிட்டுள்ளார். 


இவரது இந்த வளர்ச்சியையும் இந்த சந்தோஷத்தையும் மேலும் மெருகூட்டும் விதமாக பல சினிமா பிரபலங்கள் , ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement