• Apr 26 2024

காதலர் தினத்தில் ஐஸ்வர்யாவின் வலைத்தள பதிவு; அங்கு சென்றும் தனுசை தேடிய ரசிகர்கள்-என்ன சொன்னார்கள் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

காதலர் தினத்தை சினிமா பிரபலங்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள். விதவிதமான புகைப்படங்கள், பழைய நினைவுகள் என சமூக வலைத்தளங்களில் பல விதமான பதிவுகளைப் பார்க்க முடிகின்றன.


அந்த வகையில் ரஜினிகாந்தின் மகளும் தனுஷின் முன்னாள் மனைவியும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேற்றே காதலர் தினம் பற்றி ஒரு பதிவிட்டுள்ளார். தனது மகன்கள் லிங்கா, யாத்ரா ஆகியோருடன் வீடியோ காலில் பேசும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “உங்களை நேசிப்பவர்களை நேசிப்பதில் மகிழ்ச்சி,” என்று பதிவிட்டு அதில் லிங்கா, யாத்ரா ஆகியோரது பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளார். 


தனுஷ் பெயர் அதில் இடம் பெறவில்லை. பிரிவதாக அறிவித்த தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.ஆனால், இருவரும் ஒன்றாக இல்லை என்பதை இந்தப் பதிவு உறுதிப்படுத்தியுள்ளது.


இருப்பினும் தம்முடைய பிள்ளைகளின் விழாக்கள் மற்றும் நிகழ்வுகளில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டு வருகின்றனர். இதனால் விரைவில் இருவரும் சேர வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement