• Jan 18 2025

ஐஸ்வர்யா ராஜேஷின் இன்னொரு ஆக்சன் படம்.. இந்த படமாவது தேறுமா?

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கடந்த சில ஆண்டுகளாக நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் மற்றும் அதிரடி ஆக்சன் படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் நடித்த எந்த படமும் இதுவரை பெரிய வெற்றி பெறவில்லை என்பது துரதிஷ்டவசமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு அதிரடி ஆக்சன் படத்தில் அவர் நாயகியாக நடித்து வரும் நிலையில் இந்த படமாவது தேறுமா?என கேள்வி எழுந்துள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்அட்டகத்திஎன்ற திரைப்படத்தில் அமுதா என்ற கேரக்டர் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த நிலையில் அதன் பிறகுரம்மி’ ’பண்ணையாரும் பத்மினியும்’ ’திருடன் போலீஸ்’ ’காக்கா முட்டை’ ’மனிதன்’ ’தர்மதுரைஉள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அவர் நாயகிக்கு முக்கியத்துவம் படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாககனா’ ‘பூமிகா’ ’டிரைவர் ஜமுனா’ ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ’ரன் பேபி ரன்’ ’சொப்பன சுந்தரி’ ’பர்கானாஉள்ளிட்ட படங்களில் நடித்தார். இதில்கனாதிரைப்படத்தை தவிர வேற எந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் தற்போது அவர்கருப்பர் நகரம்’ ’மோகன் தாஸ்’ ’தீயவர் கொலைகள் நடுங்கஉள்ளிட்ட தமிழ் படங்களிலும் இரண்டு மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா  ராஜேஷ் நடிக்க இருக்கும் அடுத்த அதிரடி திரைப்படம்வளையம்’. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். மனோ பாரதி இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் என்பவர் இசையமைக்கிறார். டில்லி பாபு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக  நடைபெற்று வருவதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.



Advertisement

Advertisement