• Oct 07 2024

ஸ்ருதிஹாசனை அடுத்து ‘கூலி’ படத்தில் இணைந்த ‘பிகில்’ நடிகை.. ரஜினிக்கு இன்னொரு மகளா?

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ‘பிகில்’ நடிகையையும் இந்த படத்தில் இணைந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் தொடங்கிய நிலையில் இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன் உள்பட பலர் கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இன்றைய படப்பிடிப்பில் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தில் ‘பிகில்’ படத்தில் நடித்த நடிகை ரெபா மோனிகா ஜான் இந்த படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.



தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனைகளில் ஒருவராக ரெபா மோனிகா நடித்திருந்தார் என்பதும் அதன் பிறகு ’தனுசு ராசி நேயர்களே’ ’எப்.ஐ.ஆர்’ ‘அவர் பெயர் ரஜினி’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சில மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது ரெபா மோனிகா ’கூலி’ படத்தில் இணைந்துள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவர் நடிப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், ரஜினியின் மகளாக நடிக்கும் நிலையில் இன்னொரு மகளாக ரெபா மோனிகா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement