• Jan 15 2025

ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யபட்ட வீராங்கனைக்கு உறுதுணையாய் நிற்கும் நடிகை சமந்தா !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

கோலாகலமாக பாரிஸில் ஆரம்பமான ஒலிம்பிக் போட்டிகளின் முடிவுகள் நாளுக்கு நாள் அறிவிக்கப்பட பதக்கங்களின் எண்ணிக்கை வரிசையில் தங்கள் நாட்டின் இடத்தை கவனித்து வருகின்றனர் பொது மக்கள்.86 பதக்கங்களுடன் அமெரிக்க முன்னிலை வகிக்க 3 பதக்கங்களுடன் 63 வது இடத்தில் உள்ளது இந்தியா.

Paris Olympics 2024 Medal Table - WE ...

இவ்வாறிருக்கையில் மல்யுத்த போட்டியில் இறுதிச் சுற்றுக்கான வாய்ப்பை பெற்று முன்னேறியிருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.50 கிலோ எடைப்பிரிவில் 100 கிராம் கூடுதலாக இருந்ததனால் இத் தகுதி நீக்கம் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி - அரையிறுதிக்கு முன்னேறினார் வினேஷ் போகத்!  - News7 Tamil

இந்நிலையில் குறித்த வீராங்கனைக்கு இந்திய அளவில் ஆறுதல் பெருகியுள்ளது.இந்திய பிரதமர் தொடக்கம் முக்கிய பிரபலங்கள் அனைவரும் தமது ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.பிரபல நடிகையான சமந்தா தற்போது குறித்த வீராங்கனைக்கு ஆறுதலாய் சில வார்த்தைகளை பகிர்ந்து தனது இன்ஸ்டாவில் பதிவொன்றை இட்டுள்ளார்.

Paris 2024 Olympics, Wrestling: மகளிருக்கான மல்யுத்த போட்டியில்  இந்தியாவிற்கு பதக்கம் உறுதி – அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத்!

குறித்த பதிவில் "சில நேரங்களில், மிகவும் நெகிழ்ச்சியான நபர்கள் கடினமான தடைகளை எதிர்கொள்கின்றனர். நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஒரு உயர்ந்த சக்தி உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சிரமங்களுக்கு மத்தியிலும் நிலைத்து நிற்கும் உங்களின் அசாத்திய திறமை உண்மையிலேயே போற்றத்தக்கது.உங்கள் உயர்வு தாழ்வுகள் அனைத்திலும் நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம்." குறிப்பிட்டுள்ளார் சமந்தா. 

Advertisement

Advertisement