• May 19 2024

மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்ட நடிகை-பிரபல நடிகர் கைது

stella / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராகவும், பிரபல நடிகர்களில் ஒருவராகவும் வலம் வந்தவர் நடிகர் விஜய் பாபு. மலையாள சினிமாவில் சுமார் 10 ஆண்டுகளாக பிரபல நடிகராக இருந்து வருகின்ற இவர் 'ப்ரைடே பிலீம் ஹவுஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவுனராக இருந்து பல்வேறு வெற்றிப் படங்களையும் தயாரித்து இருக்கின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் தயாரித்த படத்தில் நடித்திருந்த நடிகை ஒருவர், இவர் மீது கொச்சி காவல் நிலையத்தில் பாலியல் புகார் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது படத்தில் நடிக்க சான்ஸ் தருவதாக கூறி கொச்சியில் உள்ள தனது குடியிருப்பில் வைத்து மயக்க மருந்து கொடுத்து தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மேலும் நிர்வாணமாக வீடியோ எடுத்து தன்னை மிரட்டுவதாகவும் அந்த நடிகை பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார்.

நடிகையின் இந்தக் குற்றச்சாட்டுப் புகாரை அடுத்து நடிகர் விஜய் பாபு மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து டுபாயில் தலைமறைவாக இருந்த நடிகர் விஜய் பாபு கடந்த ஜூன் 1-ஆம் தேதி இந்தியா வந்திருந்தார். இங்கு வந்ததும் விஜய் பாபுவிடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது நடிகையின் சம்மதத்துடன் தான் உடலுறவில் ஈடுபட்டதாக கூறியதாகவும், இந்தப் பிரச்சினையில் உண்மையில் பாதிக்கப்பட்டது நான் தான் என்றும் கூறியிருந்தார். அது மட்டுமல்லாது பின்னர் ஃபேஸ்புக் லைவ் மூலம் அப்பெண்ணின் பெயரையும் பயன்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் இந்த வழக்கை சட்ட ரீதியாக நான் எதிர்கொள்வேன் என்றும் விஜய் பாபு கூறி இருந்தார். இதனிடையே பாதிக்கப்பட்ட அந்த நடிகை கடந்த வாரம் நடிகர் விஜய் பாபு மீது மேலும் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். அதாவது இந்த வழக்கை வாபஸ் பெற்றால் ஒரு கோடி ரூபாய் தருவதாக விஜய்பாபு தரப்பில் இருந்து தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக கூறி பகீர் கிளப்பினார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட நடிகையின் பெயரை பேஸ்புக் லைப் ஊடாக வெளியிட்ட புகாரில் விஜய் பாபு தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். இன்று விசாரணைக்காக ஆலுவா போலீஸ் கிளப்பிற்கு வந்த விஜய் பாபுவை திடீரென போலீசார் கைது செய்தனர். அதுமட்டுமல்லாது தொடர்ந்து அவரிடம் இக்குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைகளை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement