• May 19 2024

இன்ஸ்டா அக்கவுண்டை ரகசியமாக வைத்திருக்கும் பிரபல நடிகர்- அட இவர் பிரபல நடிகையின் கணவராச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரன்பீர் கபீர். இவர் மறைந்த முன்னணி நடிகரான ரிஷி கபூரின் மகன் ஆவார். மேலும் ரசிகர்களின் ட்ரீம் கேளான ஆலியா பட் ஐக் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் திருமணமும் செய்து கொண்டுள்ளார்.

நான்காவது தலைமுறை கபூர் வாரிசான ரன்பீர் கபீர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பாலிவுட்டில் இருந்து தனக்கென ஒரு பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளார். இவர் நடித்த படங்கள் வெற்றியை பெற்ற அதே நேரம் ஒரு சில படங்கள் தோல்வியும் பெற்று இருக்கின்றன. ரன்பீர் கபூர் தனது ஏற்ற தாழ்வுகளின் பங்கைக் கண்டு 2018 இல் இவர் நடித்த படமான 'சஞ்சு' மூலம் மீண்டும் ஒரு வெற்றியாளராக வலம் வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் வருண் தவான் நடிகர் ரன்பீர் கபீர் பற்றி ஒரு செய்தியைக் கூறியிருந்தார். அதில் ரன்பீர் ரகசிய அக்கவுண்ட் பயன்படுத்தி வருவதாகவும் அது ஆலியா பட்டிற்கான ரகசிய அக்கவுண்ட் என்றும் கிண்டலாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் ரன்பீர் கபீரிடம் ரகசிய இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் பற்றி ஒரு சிலர் கேட்டிருந்தார்கள். அதற்கு அவர் பதிலளிக்கையில் "எனக்கு 'சோஷியல் மீடியா அக்கவுண்ட் இருக்கு. ஆனால் அதில் நான் போஸ்ட் எதுவும் போடுவதில்லை. அதனால் எனக்கு ஃபாலோவோர்கள் யாரும் கிடையாது. அதனால் எனக்கு என்ன கிடைக்கப்போகின்றது? ஆனால் எப்போதும் அப்படியே இருக்க முடியாது. நான் எனது அக்கவுண்டை பப்ளிக் ஆக்குவேன். இப்போதும் நான் சோஷியல் மீடியா இல்லாமலேயே நன்றாகத் தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்" என்றார்.

ரகசிய இன்ஸ்டா அக்கவுண்ட் பற்றி இவர் கூறிய இந்த பதில் ரசிகர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் ரன்பீர் கபூர் தற்போது பிரம்மாஸ்திர பார்ட் ஒன் : சிவா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு அனைவரின் வரவேற்பையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement