• May 19 2024

'அடடா என்ன ஒரு அழகு' மாடர்ன் உடையில் மாஸாக போஸ் கொடுத்த ப்ரியங்கா மோகன்- கியூட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2019 கன்னட திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். தொடர்ந்து அதே ஆண்டு "காங் லீடர்" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார்.இப்படம் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலை குவித்தது. இதன் மூலம் இவருக்கு நல்ல வாய்ப்பை கொடுத்ததால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்

தொடர்ந்து தமிழ் சினிமாவில்,இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக என்ரி கொடுத்தார். இப்படமும் மாஸ் ஹிட்டானது. இதனால் இவர் தமிழ் சினிமாவின் அதிஷ்ட நாயகியாக வலம் வருகின்றார்.

தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் நடித்த எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பின்பு மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் படத்தில் நடித்திருந்தார். இப்படமும் மிகப்பெரிய வசூலை குவித்தது. இந்த படம் மூலம் இவரும் நல்ல வரவேற்பை பெற்றார்.

இவ்வாறு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் நடிகை பிரியங்கா தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே கொண்டுள்ளார். எப்போதும் சமூகவலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை பிரியங்கா அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாவில் புகைப்படங்களை தெறிக்க விட்டு வருவார். அந்தவகையில் இவர் ஷேர் செய்துள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது. அந்தவகையில், கம்பியில் இரு கையை பிடித்த படி அவர் பார்க்கின்ற பார்வை ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement