• Apr 27 2024

பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்த வெற்றிமாறன்... மீண்டும் வெற்றி கொடி நாட்டிய நடிகர் சூரி... விடுதலை- 2 முதல் திரை விமர்சனம்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

மீண்டும் தன்னுடைய இயக்கத்தின் மூலம் படம் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறார் இயக்குனர் வெற்றிமாறன். தமிழ் சினிமாவில் வித்தியாசமாக யோசித்து கதைகளை இயக்க வேண்டும் என்று ஆசைப்படும் இயக்குனர்கள் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் வெற்றிமாறன்.

அப்படி அவரது இயக்கத்தில் கடைசியாக சூரி நடிப்பில் விடுதலை பக்கம் 1 திரைப்படம் வெளியாகி இருந்தது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருந்தது.


சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்க விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் வெளியாகி படக்குழுவினர் அனைவருக்கும் நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது.முதலாம் பாகம் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் திரையிடபட்டுள்ளது. 


இந்த நிலையில் சூரியின் விடுதலை படத்தின் 2ம் பாகம் எப்படி உள்ளது என்ற விமர்சனம் வந்துள்ளது. படம் மிகவும் சூப்பராக இருப்பதாக விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. பாகம் ஒன்றை திரையிட்ட பின்னர் பாகம் இரண்டுக்கு இன்னும் ஏதோ செய்திருப்பது போல இருக்கிறது.


15 நிமிடத்துக்கு மேலாக பாராட்டு கைதட்டல்கள் கதை எப்படி இருக்கிறது என்பதை கூறுகின்றன. இந்த விடுதலை திரையிடலில் கலந்து கொண்ட வெற்றிமாறன், நடிகர் சூரி , விஜய் சேதுபதி உள்ளிட்ட குழுவினர் பார்வையாளர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது வைரலாகிவருகிறது.  

இதோ அந்த விமர்சனங்கள்.

Advertisement

Popular articles

Advertisement

Advertisement

Advertisement