• Sep 20 2024

மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரண்வீர்- இன்று முதல் எதில் வெளியாகவுள்ளது தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் புகழ் பெற்ற பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் சூப்பர் ஹிட் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் மேன் வெர்சஸ் வைல்ட்’. உலக புகழ்பெற்ற பியர் க்ரில்ஸின் காட்டு பயண சாகசமான இந்த நிகழ்ச்சியில் இதுவரை பல பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்

அந்த வகையில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா முதல் ஹாலிவுட் ஸ்டார்கள் வரை பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு பிரதமர் மோடி கலந்து கொண்டார். மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் முதன்முறையாக கலந்து கொண்ட இந்திய பிரபலம் பிரதமர் நரேந்திர மோடிதான். அதற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த இரு எபிசோட்களும் இந்தியாவில் பெரிய அளவில் கவனம் பெற்றன.

இந்நிலையில் இப்போது இந்த நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங் கலந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சி இன்று முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்றில் பியர் கிரில்ஸ் வண்டு ஒன்றைக் கொடுத்து அதை ரண்வீரை சாப்பிட சொல்கிறார்கள். அதை சாப்பிடுவதா வேண்டாமா என ரசிகர்களிடமே கேட்கிறார் ரண்வீர்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement