• May 30 2026

சினிமாவில் ஈசி.. அரசியலில்? – விஜய்க்கு நேருக்கு நேர் சவால் விட்ட நடிகர் பிரகாஷ் ராஜ்!

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் சூழல் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது. புதிய கட்சியான தமிழக வெற்றி கழகம் மூலம் அரசியலில் களம் இறங்கியுள்ள விஜய் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விவாதங்களும் கருத்து மோதல்களும் உருவாகி வருகின்றன.


இந்த நிலையில், நடிகரும் அரசியல் கருத்தாளருமான பிரகாஷ் ராஜ் சமீபத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார். சினிமாவில் ஒருவர் எந்த வேடத்திலும் நடித்துவிடலாம், ஒரே பாடலில் கூட முதல்வராக மாறிவிடலாம். ஆனால், நிஜ அரசியலில் அது சாத்தியமா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், கடந்த காலங்களில் தமிழக மக்களுக்கு அல்லது தமிழ் மொழிக்காக எந்த பிரச்சனையும் எழுந்தபோது, விஜய் நேரடியாக மக்கள் மத்தியில் இறங்கி போராடியதுண்டா என அவர் சுட்டிக்காட்டினார். தானே பல்வேறு அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தி வந்த நிலையில், விஜய் அதுபோன்ற நிலைப்பாடுகளை எடுத்ததுண்டா என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்த பேச்சு தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயின் அரசியல் பயணம் குறித்து எதிர்பார்ப்பும், விமர்சனங்களும் ஒன்றாக அதிகரித்து வருகின்றன.

Advertisement

Advertisement