• Aug 30 2025

நடிகர் ஜெயம் ரவி நடிகை கெனீஷாவுடன் இலங்கைக்கு திடீர் விசிட் ..!

luxshi / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை கெனீஷா ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.


இதன்போது இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இச் சந்திப்பு நேற்றையதினம்(18) கொழும்பிலுள்ள இலங்கை தேசிய திரைப்படக் கழகத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில்  இலங்கையின் திரைப்பட சுற்றுலா திறனை மேம்படுத்துவது மற்றும் வெளிநாட்டு ஒத்துழைப்புகள் மூலம் உள்ளூர் திரைப்படத்துறையை வளர்ச்சியடையச்  செய்வது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.


இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் நடிகை கெனீஷா ஆகியோர் இலங்கை வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரை காண்பதற்கு ஆவலில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement