திரைப்படமொன்றுக்கான படப்பிடிப்பின் போது இடம்பெற்ற விபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நடிகர் ஷாருக்கான் தற்போது 'கிங்' என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புக்கள் மும்பையில் உள்ள கோல்டன் டொபாகோ ஸ்டுடியோவில் இடம்பெற்றது.
இந்நிலையில் தீவிரமான சண்டைக் காட்சியை படமாக்கும்போது ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை ஷாருக்கானுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டதுடன் ஷாருக்கானுக்கு ஒரு மாதம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப் படம் அடுத்த ஆண்டு அக்டோபர் அல்லது டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!