• May 21 2024

அரசியல்வாதியாக மாறும் நடிகர் தனுஷ் -வெளியானது புதிய தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிப்பின் ராட்சசன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாறன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.


இது தவிர தற்பொழுது நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.

இயக்குநர் செல்வராகவன், தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் பத்தாண்டுகளுக்கு பிறகு ‘நானே வருவேன்’ படத்தில் மீண்டும் இணைய உள்ளனர்.

மேலும் புதுப்பேட்டை படத்திற்கு பின்னர் இவர்கள் மூவரும் இணைய உள்ளதால் இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளார்.

இந்நிலையில் தனுஷ் அடுத்து மீண்டும் தமிழ், தெலுங்கில் உருவாகவுள்ள திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார், அப்படத்தை இயக்குனர் சேகர் காமலு இயக்கவுள்ளார்.

எனினும் தற்போது அப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது, அதன்படி அப்படத்தில் தனுஷ் அரசியல்வாதியாக நடிக்க இருக்கிறாராம்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement