• Apr 30 2024

மொடேர்ன் உடையில் போட்டோசூட் நடத்திய வாணி போஜன்-கலக்கல் புகைப்படங்கள் இதோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வருபவர் நடிகை வாணி போஜன். உண்மையில் இவருடைய வயது 33. இவர் சினிமா துறைக்கு வருவதற்கு முன்னர் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார் .

அப்போது அவருடன் வேலை செய்த நபரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். அதற்கு பின்னர் இவருக்கு மாடலிங் துறையில் ஆர்வம் வந்து மாடலிங் செய்ய ஆரம்பித்தார்.

அதன் பின்னர் இவர் சன்டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் கதாநாயகியாக அறிமுகமான இவர் பல சீரியல்களில் நடித்திருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து சத்தல் சுட்டீஸ் மற்றும் கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணிபுரிந்துள்ளார். இதனால் சின்னத்திரை நயன்தாரா என்றும் அழைக்கப்பட்டார்.

சினிமாவில் வாய்ப்புப் பெற்ற இவர் தமிழில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது என்று தான் கூற வேண்டும்.

இதன் பின் இவருக்கு படவாய்ப்புகள் அடுக்கடுக்காக வர ஆரம்பித்தன.இந்நிலையில் இவர் அடிக்கடி போட்டோசூட்களை நடத்தி வருவார்.தற்போதும் மொடேர்ன் உடையில் போட்டோசூட் ஒன்றை நடத்தி உள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement