நடிகர் விஜயகாந்த் நேற்றைய தினம் உயிரிழந்த தகவல் தமிழ் நாட்டையே கண்ணீரில் கலங்க செய்தது. இதை தொடர்ந்து பலரும் அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்டிருந்த சில இன்ஸ்டாகிராம் பதிவுகள் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, நடிகர் விஜயகாந்தை யாரோ பழி தீர்த்ததாக அவரது மரணத்தில் சந்தேகத்தை கிளப்பி விட்டார்.
இதை தொடர்ந்து, நடிகர் அஜித்தையும் வம்பிழுத்துள்ளார் இயக்குநர் அல்போன்ஸ். அதன்படி, தல அஜித் அவர்களுடைய அரசியல் வருகை குறித்து பேசி இருக்கிறார். அவ்வாறு அவர் வெளியிட்ட பதிவில்,
'இந்த பதிவு தல அஜித் குமார் சேருக்கு தான், நிவின் பாலி மற்றும் சுரேஷ் சந்திரா ஆகியோரிடம் இருந்து நீங்கள் அரசியலுக்குள் நுழைய இருப்பதாக கேள்விப்பட்டேன். பிரேமம் படத்தை பார்த்த உங்களுடைய மகள் அனுஷ்கா நிவின் பாலி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பொழுது நீங்கள் அவரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து பேசியது எனக்கு தெரியும்.
இதுவரை நீங்கள் பொதுவெளியில் கலந்து கொண்டதில்லை. நீங்கள் என்னிடம் பொய் சொல்லி விட்டீர்களா? அல்லது யாரும் உங்களுக்கு எதிராக நிற்கிறார்களா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் நான் மேலே கூறிய விஷயங்கள் உண்மை இல்லை என்றால் நீங்கள் பகிரங்கமாக நடந்தவற்றை தெரிவிக்க வேண்டும்'.
ஏனென்றால் நான் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன், மக்களும் உங்களை நம்புகிறார்கள்' என்று அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.
இவ்வாறு நடிகர் அஜித் அரசியலுக்கு வரக்கூடாது என்று கூறி ஒரு பதிவை போட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!