பிரபல நடிகர் ஜீவா தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தொடர்பான அப்டேட் போஸ்டருடன் வெளியாகியுள்ளது. இது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக ஷேர் ஆகி வருகிறது.
நடிகர் ஜீவா தான் சமீபத்தில் நடித்த "பிளாக்" திரைப்படத்தின் பின்னர் அடுத்ததாக இயக்குநர் ப.விஜய் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துள்ளார் . இதில் நடிகர் அர்ஜூன், நடிகை ராஷி கன்னா, யோகி பாபு, விடிவி கனோஷ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் தலைப்பு மற்றும் ரிலீஸ் திகதி இன்று மாலை 5.01 மணிக்கு வெளியாகும் என்று பழைய புத்தம் போன்ற போஸ்டருடன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளனர். இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இன்று மாலை வரும் அப்டேட் செய்திக்காக நடிகர் ஜீவாவின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
Unveil the Mystery!
A tale of secrets, battles, hope and redemption.
Join us at 5:01 PM, Dec 24, as we reveal the title and release date of our next masterpiece! 😍
A @pavijaypoet Mystery ✨
A @thisisysr Musical 💥@IshariKGanesh @VelsFilmIntl @WamIndia @JiivaOfficial… pic.twitter.com/qX9jEOt0id
Listen News!