• Aug 17 2025

வலிமையை பேசும் வார்த்தைகள் ஆர்த்தி ரவியின் பதிவு...!இன்ஸ்டாவில் டிரெண்டிங்...!

Roshika / 1 hour ago

Advertisement

Listen News!

நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக பிரிவதற்கான முடிவை அறிவித்திருந்தனர். தற்பொழுது, அவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் கடந்த காலங்களில் மீடியாவிலும் சமூக வலைத்தளங்களிலும் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். இதனால் பரபரப்பான செய்திகளும், ஊடகங்களில்  அதிகரித்த நிலையில், ஒரு கட்டத்தில் நீதிமன்றம் இருபுறத்தாரும் இதுபற்றி வெளிப்படையாக பேசுவதை தடை செய்தது.

இந்நிலையில், நடிகர் ரவி மோகன் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவு வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியுள்ளார்: “நான் எப்போதும் போலவே, மன்னிப்பு கேட்காமல், முழு வெளிப்பாட்டிலும் இருக்கிறேன். ஏனென்றால் வலிமை என்பது புதியவராக மாறுவது பற்றியது அல்ல, அது நீங்கள் எப்போதும் இருந்ததை இறுதியாக சொந்தமாக்குவது பற்றியது.”


இவ்வேளையில், ஆர்த்தி ரவியும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் புதிய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்களிடையே பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. இருவரும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் புதிய கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பது இதனால் உணர முடிகிறது.





Advertisement

Advertisement