• May 03 2024

ஒரு மாதத்திற்கு பின்னர் நடிகர் விஜய் போட்ட புதிய பதிவு- மீண்டும் vibe- ஆன ரசிகர்கள்- ட்ரெண்டாகும் போட்டோஸ்

stella / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் - லோகேஷ் காம்போவில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய லியோ, அக்டோபர் 19ம் தேதி ரிலீஸானது. லலித் குமார் தயாரிப்பில் அனிருத் இசையமைத்த இந்தப் படம், LCU-ன் உருவானது. அதுமட்டும் இல்லாமல் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 


லியோ அப்டேட் வெளியானது முதலே இந்தப் படத்துக்கு நாளுக்கு நாள் ஹைப் கூடிக்கொண்டே வந்தது. மேலும் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியானதால், முதல் ஒரு வாரத்திற்கு லியோ டிக்கெட் புக்கிங் மாஸ் காட்டியது. 


ஆனால், முதல் நாளில் மட்டுமே சிறப்பான ஓபனிங் இருந்தது. அடுத்தடுத்து வெளியான நெகட்டிவான விமர்சனங்களால் லியோ படத்திற்கு வரவேற்பு குறைந்ததாக சொல்லப்பட்டது.


இதனிடையே லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய், த்ரிஷா, அர்ஜுன், லோகேஷ் கனகராஜ், லலித் குமார் உள்ளிட்ட பிரபலங்களும் ரசிகர்களும் கலந்துகொண்டனர்.


 அந்த வகையில் தற்பொழுது நடிகர் விஜய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லியோ படத்தின் வெற்றிவிழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அவை ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement