• Jan 19 2025

தென்னிந்திய திரையுலகில் பெரும் சோகம்.. பழம்பெரும் நடிகை காலமானார்!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் பழம்பெரும் நடிகையாக திகழ்ந்துவந்த, நடிகை லீலாவதி காலமானார். இதையறிந்த பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தென்னிந்திய திரையுலகில் சுமார் 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களை நடித்து வந்த நடிகை லீலாவதி, கடந்த சில வருடங்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.


எனினும், நேற்றைய தினம் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த தகவல் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

கன்னட திரையுலகின் மூலம் அறிமுகமான இவர்...  தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர்.


'பக்த கும்பரா, மன சோசித்த மடடி, சாந்த துக்காராம்' போன்ற சின்னத்திரை தொடர்களிலும் அசாதாரண நடிப்பு வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீக்காத இடம் பிடித்தவர்.

குறிப்பாக தமிழில், ரஜனிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன்... அவள் ஒரு தொடர்கதை, பட்டினத்தார், நான் அவனில்லை, வளர்பிறை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement