• Jan 18 2025

VJS_ க்கு திடீரென சட்டையை கழட்டி ரசிகர் கொடுத்த சர்ப்ரைஸ்! அதில் என்ன சுவாரஸ்யம் தெரியுமா?

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக விஜய் சேதுபதி காணப்படுகின்றார். இவர் கதாநாயகனாக மட்டும் இல்லாமல் வில்லன் கேரக்டரிலும் அசால்டாக ஸ்கோர் செய்து வருகின்றார். இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இறுதியாக இவருடைய நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

சினிமாவில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று பலரும் போட்டி போட்டு வருவதோடு மட்டுமில்லாமல் அதற்காக தமது கடின உழைப்பையும் கொட்டி தீர்த்து வருகின்றார்கள். அந்த வகையில் விஜய் சேதுபதியும் தனக்கு கிடைத்த சின்ன சின்ன வாய்ப்புகளை உதாசீனப்படுத்தாமல் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் காத்திருந்து சினிமாவுக்குள் நுழைந்தார்.

d_i_a

இவருடைய திறமைக்கு தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த பல படங்கள் வரிசையாக ஹிட் அடித்தன.


தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் திரைப்படத்தில் நடித்து வருகின்றார் விஜய் சேதுபதி. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.


இந்த நிலையில், விஜய் சேதுபதியின் தீவிர ரசிகர் ஒருவர் திடீரென தனது சட்டையை கழட்டி விஜய் சேதுபதியை சர்ப்ரைஸ் செய்துள்ளார். 

அதாவது விஜய் சேதுபதி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவரை பார்க்க ரசிகர், தனது சட்டையை கழட்டி தனது முதுகில் குத்திய  டாட்டூவை காட்டியுள்ளார். அது மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி போட்டிருந்த அதே டாட்டூ ஆகும். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement