• Aug 29 2026

ஜி.வி. பிரகாஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. சத்தமில்லாமல் சம்பவம் செய்த நடிகர்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் 'இம்மார்ட்டல்'. இந்த படத்தில் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்துள்ளதுடன், அவருக்கு ஜோடியாக கயாடு லோகர் நடித்துள்ளார். மேலும் டி.எம். கார்த்திக், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


இந்த நிலையில், தற்போது படக்குழு ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 'இம்மார்ட்டல்' திரைப்படத்தின் முதல் பாடலான "Love-U Love-U Kaatteri" பாடல் வரும் ஜூன் 22-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடலின் தலைப்பே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இது காதல் மற்றும் கலகலப்பான அம்சங்கள் நிறைந்த பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த பாடலின் மூலம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான இசை அனுபவத்தை வழங்குவார் என்ற நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.

முதல் பாடல் வெளியாகும் அறிவிப்பை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

Advertisement

Advertisement