• Jul 27 2024

வரிசைகட்டி இறங்கிய 13 பைக்குகள்.. கண்ணீரோடு தவழ்ந்து வந்த மாற்றுத்திறனாளிகள்! ராகவாவின் சர்ப்ரைஸ்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக மட்டுமின்றி பிரபல இயக்குனராக, தயாரிப்பாளராக, நடன மாஸ்டராக காணப்படுபவர் தான் ராகவா லாரன்ஸ்.

இவர் சினிமா திரையில் பிரபலமாக காணப்படுவது மட்டுமல்லாமல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது, கஷ்டப்பட்ட மாணவர்கள், கைவிடப்பட்ட மாணவர்களின் கல்விக்கு உதவுவது என பல்வேறுபட்ட மனிதநேயம் சார்ந்த தொண்டுகளை செய்து வருகிறார்.

தமிழ் சினிமாவிலும் முதன்முதலாக மாற்றுத்திறனாளிகளை வைத்து படம் இயக்கியவரும் இவர் தான். இவர் நடிப்பில் வெளியாகும் படங்களில் அனேகமாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு என்றே ஒரு கதாபாத்திரம் காணப்படும்.


இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னால் இயன்ற  உதவியாக 13 பைக்குகளை வாங்கி அவர்களுக்கு சப்ரைஸ் கொடுத்துள்ளார். அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் அவர்களின் வளர்ச்சிக்கு அத்திவாரமாகவும் அவர் இந்த உதவியை செய்துள்ளார்.

அண்மைக்காலமாகவே ராகவா லாரன்ஸ், KPY  பாலா உடன் சேர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார். தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 13 பைக்குகளை வாங்கி அவர்களை சந்தோஷப்படுத்திய காணொளியை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement