• May 22 2024

தமிழில் தமன்னா, தெலுங்கில் ராசி கன்னா.. ‘அரண்மனை 4’ போட்டியில் வெல்வது யார்?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக காணப்படும் சுந்தர். சி இயக்கத்தில் வெளியான படம் தான் அரண்மனை. இந்த படத்தின் நான்காவது பாகமும் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

அரண்மணை நான்காவது பாகத்தில் சந்தோஷ், தமன்னா, ராஷி கன்னா, சந்தானம், ஜோகி பாபு ,மொட்டை ராஜேந்திரன்,கோவை சரளா போன்ற பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.


இந்த படத்தின் டீசர் அண்மையில் தான் வெளியாகி ரசிகர்களுக்கு  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து பரஸ்ட் சிங்கிள் பாடலும் தமன்னா, ராசிகன்னா நடனத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தது.


இந்த நிலையில், தமிழ் சினிமாவில் நான்கு பாகம் வரை ஹிட்டத்த அரண்மனை படத்தின் நான்காம் பாகம், இந்த மாதம் 26ம் திகதி தெலுங்கில் வெளியாக உள்ளதாம் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகரும், இயக்குநருமான சுந்தர். சி வெளியிட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் தமன்னாவுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர், தெலுங்கு மாநிலங்களில் ராஷிகன்னாவுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர், அதனால் இந்த படத்தில் யார் வெற்றி போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .


Advertisement

Advertisement