தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்ட நடிகராக மணிகண்டன் காணப்படுகின்றார். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகின்றது.
மணிகண்டன் நடிப்பில் வெளியான ஜெய் பீம், குட் நைட், லவ்வர் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் பெற்றது. இவர் தேர்ந்தெடுக்கும் திரைக்கதைகள் தனித்துவமானதாகவும் தனது கேரக்டரை ரசிகர்களுக்கு ஆணித்தனமாக பதிய வைக்கும் வகையிலும் காணப்படுகின்றது. இதன் காரணத்தினாலே குறுகிய நாட்களுக்குள் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் மணிகண்டன்.
சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோ ஒன்றை போட்டியாளராக பங்கேற்று இறுதியில் ரன்னரப்பாக வெற்றி பெற்றவர் மணிகண்டன். அதன் பின்பு ரேடியோ ஜாக்கி ஆக இருந்த அவருக்கு சினிமாவில் இருந்த ஆர்வத்தின் மூலம் பிட்ஸா படத்தில் அறிமுகமானார்.
இந்த நிலையில், மணிகண்டன் கொடுத்த பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், காதலும் கடந்து போகும் டைமில் தான் விஜய் சேதுபதி சார் எனக்கு பழக்கம்.
ஒரு நாள் எதேச்சையாக மழைக்கு ஒதுங்கி நிற்கும் போது அவரோடு நிறைய பேச முடிந்தது. ஒருமுறை என் தங்கைக்கு மூக்கில் ஆபரேஷன் நடந்ததை கேள்விப்பட்டு ஹாஸ்பிடலுக்கே கிளம்பி வந்து விட்டார்.
அதேபோல என் தங்கை திருமணத்துக்கு அவருக்கு நான் முறையாக பத்திரிக்கை கூட வைக்கவில்லை. ஆனாலும் எனக்கு போன் செய்துவிட்டு நேரடியாக வந்து விட்டார். நான் கேட்காமலேயே எனக்கு மூன்று லட்ச ரூபாய் எடுத்து கொடுத்தார்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள். அந்த பணம் இருந்ததால்தான் என்னால் மண்டப வாடகை உள்ளிட்ட அனைத்து செலவையும் சமாளிக்க முடிந்தது என தெரிவித்து உள்ளார்.
Listen News!