• Oct 03 2025

நடிகர் உதவி செஞ்சா வாங்கிக்கங்க.. அதுக்காக நாட்டை கொடுக்க நினைக்காதீங்க.! அமீர்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

'மௌனம் பேசியதே' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்  அமீர்.  அதன் பின்பு இவர் இயக்கத்தில் வெளியான ராம் திரைப்படம் மிகப்பெரிய பாராட்டை பெற்றது.  2007 இல் அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படமும் பல விருதுகளை குவித்தது.  

இதை தொடர்ந்து இவருடைய இயக்கத்தில் வெளியான ஆதி பகவன், வடசென்னை  ஆகிய படங்களும் குறிப்பிடத்தக்கவை. இவர் சிறப்பு நடிகராகவும் நடித்துள்ளார்.  இவருடைய படங்கள் பெரும்பாலும் சாதாரண மக்களின் வாழ்க்கையை  அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளன. 


இந்த நிலையில், இயக்குநரும் நடிகருமான அமீர் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இல் 'நடிகர் நலத்திட்ட உதவிகள் செஞ்சா வாங்கிக்கங்க.. அதுக்காக அவர்கிட்ட நாட்டை கொடுக்க வேண்டுமென்று நினைக்காதீங்க' என பதிவிட்டுள்ளார். தற்போது இது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.  

தமிழக வெற்றி கழகத்தின் விஜய் கரூர் சம்பவத்தில்  விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், அமீரும் தனது கண்டனத்தை தெரிவித்து இந்த பதிவை வெளியிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement