இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் போஸ்டர்கள் நேற்றைய தினம் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது.
அதிலும் 'நான் ஆணையிட்டால்' என்ற டேக் லைனுடன் தன் கையில் சாட்டையை வைத்து விஜய் சுழற்றுவதுபோல வெளியான செகண்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இது எம்ஜிஆர் நடிப்பில் வெளியான 'எங்கள் வீட்டுப்பிள்ளை' படத்தில் இடம்பெற்ற 'நான் ஆணையிட்டால்' என்ற பாடலை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதனால் விஜயன் ஜனநாயகன் படம் அரசியல் கதை களத்தை பின்னணியாகக் கொண்டது என்பது உறுதியானது.
லியோ மற்றும் கோட் பட படைப்பின் போது ரசிகர்களுக்கு மத்தியில் வண்டியில் ஏறி விஜய் எடுத்த செல்பி மிகவும் பிரபலம் ஆனது. அந்தப் புகைப்படத்தின் பாணியிலேயே ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காணப்பட்டது.
ஆனாலும் எச். வினோத் அளித்த பேட்டி ஒன்றி, இந்த படம் அரசியல் கட்சியையோ அரசியல் தலைவரையோ தாக்கும் படமாக அமையாது.. இருநூறு சதவீதம் கமர்சியல் படம் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், 'ஜனநாயகன்' படம் பற்றி பிரபல பத்திரிக்கை விமர்சகர் செய்யாறு பாலு கொடுத்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறுகையில், எச். வினோத்துக்கு இது முக்கியமான படம். தளபதி 69 என்று இனி சொல்லக்கூடாது 'ஜனநாயகன்' என்று தான் சொல்ல வேண்டும்.
அதற்கு காரணம் இது விஜயனுடைய கடைசி படம் என்று சொல்லுகின்றார்கள். விஜயின் 70 வது படம் இருக்குமா இல்லையா என்பது தெரியாது. ஆனால் இது விஜயினுடைய கடைசி படமாக இருந்தால் கண்டிப்பாக மிகப்பெரிய ஹிட் கொடுக்கும். இதுக்கு மிகப்பெரிய ஓபனிங் இருக்கு.
இந்த படத்துல விஜய் என்ன பேசி இருக்காரு? 2026 நடை பெற உள்ள தேர்தலை மையமாகக் கொண்டு அரசியலை பேசி இருக்காரா? என்ன கருத்தை சொல்ல வருகின்றார் என்பது இந்த படத்தில் ஃபர்ஸ்ட் ஷோவிலேயே தெரிந்து விடும்.
அதன்படி ஜனநாயகன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கப்போகுது. முதல் ஷோவே சும்மா தெறிக்கப் போகுது என குறிப்பிட்டுள்ளார்.
Listen News!