தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடந்த 27 ஆம் திகதி கரூரில் மேற்கொண்ட பரப்புரையின் போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் இந்தியா முழுவதுமே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் நடிகர்கள் வரை பலரும் விஜயையும் அவருடைய கட்சியையும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் நடந்து ஒரு சில மணி நேரங்களிலேயே நடிகை ஓவியா விஜயை கைது செய்ய வேண்டும் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இந்த பதிவு ஆனது இணையத்தில் வேகமாக பரவியது இவருடைய பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பின.
இது விஜய் ரசிகர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது. இதனால் ஓவியாவை மோசமாகவும் நாகரிகம் அற்ற வார்த்தைகளாலும் திட்டினர். அதனையும் ஓவியா ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்தார்.
இந்த நிலையில், விஜய்யும் அவரது கட்சியினரையும் தாக்கும் வகையில் மீண்டும் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகை ஓவியா. அதில் அவர் போட்ட கேப்ஷன் விஜய் ரசிகர்களை மேலும் கொந்தளிக்க செய்துள்ளது. தற்போது அவருடைய பதிவு வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!