• Jan 27 2025

ராதிகாவுக்கு நான் கேரண்டி.. சக்காளத்திக்கு பாக்கியா செய்த காரியம்?

Aathira / 12 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட், பாக்கியா வீட்டில் ட்ரிப் செல்வதற்காக எல்லோரும் தயாராகிக் கொண்டிருக்க அப்போது எழில், அமிர்தா, நிலா பாப்பா ஆகியோரும் வருகின்றார்கள். இதன்போது எல்லாரும் ரெடியாகி வரும்போது கோபி ராதிகாவையும் அழைத்து வருகின்றார்.

இதனால் ஈஸ்வரி கோபப்பட்டு ராதிகாவை எதுக்கு கூட்டி வருகின்றா? எங்களுடைய குடும்பம் மட்டும் தானே ட்ரிப் போவதாக சொன்னாய்? ராதிகா வந்தா பிரச்சினையாக தான் இருக்கும் அதனால் ராதிகா வர வேண்டாம் என்று சொல்லுகின்றார்.

ஆனாலும் கோபி ஈஸ்வரியை சமாதானப்படுத்தவும் அவர் தனது முடிவில் உறுதியாக இருக்கின்றார். இதனால் ஈஸ்வரியை தனியாக அழைத்துச் சென்ற கோபி, ராதிகா எந்த பிரச்சனையும் தர மாட்டார்.. அதற்கு நான் கேரண்டி.. இப்ப ராதிகா வரவில்லை என்றால் அதன் பின்பு எனக்கும் ராதிகாவுக்கு பிரச்சனை வரும்..  எனக்கு மீண்டும் ஹார்ட் அட்டாக் வரும் என்று சொல்ல, இறுதியில் ஈஸ்வரி சமாதானம் ஆகிறார்.


இதை தொடர்ந்து எல்லோரும் சந்தோஷமாக செல்கின்றார்கள். அங்கு மையூவும் இனியாவும் ராட்டினத்தில் சுற்றுவதற்காக செல்லுகின்றனர். மறுபக்கம் ராதிகா எழிலிடம் உனது பட சூட்டிங் எப்படி இருக்கின்றது என்று விசாரிக்கின்றார். மேலும் ஜெனியிடம் நீ படித்திருக்கிறாய் தானே ஏதும் வேலைக்கு போக விருப்பம் இல்லையா என்று கேட்க, அதற்கு அவர் வேலைக்கு போக விருப்பமில்லை பிசினஸ் பண்ண விருப்பம் என்று சொல்லுகிறார்.

இவ்வாறு ஒவ்வொருவரிடமும் ராதிகா கதைத்து பேசுகின்றார். அந்த நேரத்தில் அங்கு வந்த இனியா  ஈஸ்வரியை ட்ரெயினில் செல்ல வருமாறு அழைக்கின்றார். ஆனாலும் தான் வரவில்லை என ஈஸ்வரி அடம்பிடிக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement