• Sep 21 2024

என்னுடைய டுவிட்டை படிக்கும் போது கெட்ட மூட்டில் இருந்திருப்பீர்கள்- மனம் திறந்த நடிகர் கிச்சா சுதீப்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கிச்சா சுதீப். இவர் கன்னடம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகின்றார். நடிகர் சுதீப் நடிப்பில் மட்டுமல்லாது சமூக சேவைகள் செய்வதிலும் அதிகம் ஆர்வம் கொண்டவர். இதனால் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

இந்த நிலையில் இந்தி மொழி சர்ச்சை சமீபகாலமாக தமிழகத்தை தாண்டி தெலுங்கு சினிமா, கன்னட சினிமா நடிகர்கள் வரை நீண்டு வருகிறது. சில நாட்கள் முன் கன்னட நடிகர் கிச்சா சுதீப் இந்தி மொழி குறித்து பேசியதும், அதற்கு அஜய் தேவ்கன் பதிலளித்ததும் சர்ச்சைகள் ஆனது.

அதாவது நடிகர் கிச்சா சுதீப், "ஹிந்தி தேசிய மொழி கிடையாது. பாலிவுட் நட்சத்திரங்களும் பான் இந்தியா படங்களை தயாரிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்கிறார்கள். ஆனாலும் வெற்றி காண்பதில் அவர்கள் தோல்வி அடைகிறார்கள்" என்று பேசியிருந்தார்.

எதிர்பாராத விதமாக கிச்சா சுதீப்பின் இந்த கருத்துக்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் எதிர்க் கருத்து தெரிவிக்கத் தொடங்கினார். "சகோதரர் கிச்சா சுதீப், ஹிந்தி நமது தேசிய மொழி இல்லையென்றால் நீங்கள் ஏன் உங்கள் தாய்மொழி படங்களை இங்கு டப் செய்து வெளியிடுகிறீர்கள்? ஹிந்தி முன்பும் இப்போதும் எப்போதும் நமது தாய்மொழியாக, தேசிய மொழியாக இருக்கும்" என்று ஹிந்தியில் பதிவிட்டார் அஜய் தேவ்கன்.

இவ்வாறாக இருவருக்கும் இடையில் சில சில சர்ச்சைகள் இடம் பெற்று வந்த நிலையில் கிச்சா சுதீப் நடிப்பில் வெளியாகவுள்ள 'விக்ராந்த் ரோணா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் இடம்பெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்ட கிச்சா சுதீப்பிடம் ஹிந்தி மொழி தொடர்பாக பாலிவுட் நடிகர் அஜய் கானுடன் இவருக்கு ஏற்பட்ட கருத்து மோதல் தொடர்பாக வினவப்பட்டது. இதற்குப் பதில் அளிக்கும் விதமாக இவர் "என்னுடைய டுவிட்டை படிக்கும் போது நீங்கள் கெட்ட மூட்டில் இருந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். அதனால் நான் அவருடன் சண்டை போட்டது போல உங்களுக்குத் தெரிந்துள்ளது. அஜய் தேவ்கான் என்னுடைய நண்பர் தான், என்னிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்று நினைத்தால் போன் செய்து கேட்டிருக்கலாம், டுவிட்டர் மாதிரி பொதுவெளியில் கேட்டால் நானும் பொதுவெளியில் தான் பதில் சொல்ல வேண்டி வரும்." என்றார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் "நான் தொடங்கி வைக்காத ஒரு விவாதத்தை எவ்வாறு முடித்தேன் என்பதற்காக என்னைக் குற்றம் சொல்லாதீர்கள். நான் அனைவருக்கும் மதிப்பு கொடுக்கக்கூடியவன். அவருக்கு தவறான புரிதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை என்னால் உணர முடிகின்றது. அதில் தவறும் இல்லை. அதனால் எல்லாவற்றையும் சொன்ன பின்பு தான் என்னுடைய மொழியில் நான் டுவிட் செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று சென்னேன்" எனவும் தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement