விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட், பாக்யா தனது ரெஸ்டாரண்டில் எழிலின் படப்பிடிப்பு விழாவை திரும்பத் திரும்ப போட்டுக் கொண்டு அங்கு வர கஸ்டமரிடமும், அது தனது மகன்தான்.. எனது பெயரை வைத்து தான் படத்தை இயக்கியுள்ளான் என்று பெருமையாக பேசுகிறார்.
இதைத் தொடர்ந்து ஈஸ்வரி கோபி இடமும் பாக்யாவிடமும் பேச வேண்டும் என்று இருவரையும் அமர வைக்கின்றார். இதன்போது ஜெனியின் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று செழியன் அங்கு சென்று விட்டான். ஆனால் அவர்கள் செழியனை அவர்களுடைய பக்கமே இழுத்தெடுக்க பிளான் பண்ணுகின்றார்கள் என்று அதிர்ச்சி தகவலை சொல்லுகின்றார்.
இதை கேட்ட பாக்யா, அவர்கள் அப்படி பண்ண மாட்டார்கள் செழியனுக்கு எங்க இருக்க பிடிக்கிறதோ அவன் அங்கே இருக்கட்டும் என்று சொல்ல, உனக்கு உன் பிள்ளை மீது கொஞ்சமும் அக்கறை இல்லையா என்று திட்டுகின்றார். ஆனாலும் கோபி பாக்கியா சொல்வது சரிதான் அவர்கள் இப்போது வளர்ந்து விட்டார்கள் அவர்களை இழுத்து பிடிக்க வேண்டாம் என்று பேசுகின்றார்.
இன்னொரு பக்கம் இனியா ஆகாஷை பார்ப்பதற்காக செல்வி வீட்டுக்கு செல்கின்றார். அங்கு இனியா சென்றதும் ஆகாஷ் பயப்பட தனக்கு யாரு நினைத்தும் பயமில்லை என்று ஆகாசுக்கு புத்தகம் ஒன்றை பரிசாக கொடுக்கிறார்.
அந்த நேரத்தில் செல்வி வீட்டுக்கு வருகின்றார். இதனால் இனியா பதறி அடித்து வீட்டுக்குள்ளே போய் ஒளிந்து கொள்கின்றார். செல்வியை கண்டதும் ஆகாஷ் பயத்தில் நடுங்க, என்ன நடந்தது என்று செல்வி விசாரித்துவிட்டு தான் போனை எடுக்க வந்ததாக எடுத்து விட்டு செல்கின்றார். அதன் பின்பு இனியா வீட்டுக்கு கிளம்பி செல்கிறார்.
இறுதியில் எழில் வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து ஒரு விஷயம் சொல்ல வேண்டும் அது சர்ப்ரைஸ் என எல்லோரையும் அழைக்கின்றார். மேலும் வரும்போது செழியனையும் கூடவே கூட்டி வருகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!