• May 20 2024

சிவன் வேடத்தில் டைம் ட்ராவல் கதையம்சம் கொண்ட ஒரு படத்தில் நடிக்க கமிட்டான நடிகர் யோகிபாபு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தமது காமெடி நடிப்பினால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர்களின் வரிசையில் முக்கிய இடத்தைப் பெறுபவர் நடிகர் யோகிபாபு. இவர் தமிழில் ரஜினி ,அஜித் ,விஜய் ,விஷால் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தவர்.

அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார்.

அந்த வகையில் இவர் கதாநாயகனாக நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து இப்போது மேலும் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் இயக்குநர் ஆர் கண்னன் இயக்கும் ‘பெரியாண்டவர்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது ஒரு டைம் ட்ராவல் கதை என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் யோகி பாபு சிவன் வேடத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement