• May 09 2024

குடும்பத்துடன் சென்று புதிய கார் வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா- இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளதோடு கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

மேலும் இந்த சீரியலில் மீனா என்ற வேடத்தில் நடித்து வருபவர் நடிகை ஹேமா. எல்லா கதாபாத்திரத்தை விட மீனா வேடத்தில் நிறைய கலவை இருக்கும். அவரை காமெடி வேடம் சொல்ல முடியாது, வில்லியா, நல்லவரா என எதுவுமே சொல்ல முடியாது.

இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி தொடர்களின் மெகா சங்கமம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வார இறுதியில் மெகா சங்கமம் முடிவுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை ஹேமா குடும்பத்துடன் கார் ஷோரூம் சென்று புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளனர். காரை பெற்றதும் தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். தற்போது அவர் கார் வாங்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement