மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. தனது இயல்பான நடிப்பு, கதாபாத்திரத் தேர்விலும் காட்டும் வித்தியாசம் என்பவற்றால் ரசிகர்களிடையே தனி இடத்தைப் பெற்றுள்ளார். பின்னர் தமிழ் சினிமாவிலும் கால் பதித்த அவர், “ஆக்ஷன்”, “ஜகமே தந்திரம்” போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்தார்.
அதனைத் தொடர்ந்து “கேப்டன்”, “பொன்னியின் செல்வன்”, “கட்டா குஸ்தி” போன்ற பல்வேறு வகை படங்களில் நடித்த அவர், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார். கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பும் அவர், ஒவ்வொரு படத்திலும் புதிய சவால்களை ஏற்று நடிப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு அவர் நடித்த “மாமன்” படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே நேரத்தில், சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பலரும் அவர் ஏன் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இல்லை என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் ஐஸ்வர்யா லட்சுமி தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அதில், “எனக்கு திருமணம் செய்யும் எண்ணமே இல்லை” என்று தெளிவாக கூறியுள்ளார்.
மேலும், “வாழ்க்கைத் துணை வேண்டும் என்பது உண்மை தான். ஆனால், இருவரும் சேர்ந்து வாழும் போது ஒருவருக்கொருவர் நிம்மதி இல்லாத நிலை உருவாகக் கூடாது. அதனால், திருமணம் இல்லாமலேயே உறவில் இருப்பது சில சமயங்களில் சிறந்ததாக இருக்கலாம்.” என்று கூறியுள்ளார்.
அவரது இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!