• May 08 2026

15 ரூபாவோட பல நாள் சாப்பிடாம அலைஞ்சு திரிஞ்சு இருக்கன்.! யோகி பாபு பகிர்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான ஜோகி பாபு  தற்போது பல முன்னணி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 

தனித்துவமான காமெடி டைமிங் மற்றும் இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த அவர், சமீப காலங்களில் கதாநாயகனாகவும் வெற்றி பெற்று வருகிறார்.

குறிப்பாக  யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படம் அவருக்கு விமர்சன ரீதியாகவும் பாராட்டு பெற்றுக் கொடுத்தது. மேலும் புதிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.   


இந்த நிலையில், நடிகர்  யோகி பாபு வழங்கிய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறுகையில், நான் சினிமாவுக்கு வந்து 23 வருஷம் ஆகப்போகின்றது. 15 ரூபா வச்சுக்கிட்டு மேக்ஸ் போட்டோ பாக்கெட்ல போட்டுட்டு சாப்பிடாமல் சினிமா கம்பெனிக்கு பல நாள் அலைஞ்சு வாய்ப்பு தேடுன காலம் உண்டு. 

அந்த வலி தான் இன்னைக்கு என்ன இந்த இடத்தில் நிக்க வச்சு இருக்கு. அதுக்கு உங்க எல்லாருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தெய்வ நம்பிக்கை இருக்கிறவன கண்டிப்பா தெய்வம் கைவிடாது என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement