• May 30 2026

“விரைவில் நல்ல செய்தி வரும்” – விஜய்க்கு நெருங்கியவர் கொடுத்த பேட்டி வைரல்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக தேர்தல் பிரச்சாரப் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றார். ஆனாலும், இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

நடிகர் விஜய்யின் ரசிகையாக இருந்த சங்கீதா, அவரை காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த சங்கீதா, தற்போது விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார்.

நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் சங்கீதா. மேலும், தாங்கள் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இதற்கிடையில், இந்த விவாகரத்து வழக்கு பேசுபொருளாக இருந்த நிலையில், விஜயும் திரிஷாவும் ஒரு பிரபல திருமண விழாவில் ஒரே நிற ஆடையில் கலந்து கொண்டது சர்ச்சையை அதிகரித்தது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சமூக வலைதளங்களில் வரும் கருத்துக்களை கவனித்து வருகிறார். ரசிகர்கள் சங்கீதாவும் விஜயும் மீண்டும் ஒன்றாக சேர வேண்டும் என விரும்புகின்றனர். இதே எண்ணமும் விருப்பமும் தான் விஜய்க்கும் உள்ளது என திண்டுக்கல் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement