• Sep 21 2023

ஜெயிலர்’ திரைப்படத்தை பார்ப்பீர்களா?- ரசிகரின் கேள்விக்கு பளிச்சென்று பதில் சொன்ன ஷாருக்கான்

stella / 1 month ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு FDFS எனப்படும் அதிகாலை ஷோ திரையிடப்படவில்லை. காலை 9 மணி காட்சி என்றாலும் நேற்று நள்ளிரவு முதலே ரசிகர்கள் திரையரங்கில் காத்திருந்து ஜெயிலர் படத்தை பார்த்து ரசித்தனர்.

அதுமட்டும் இல்லாமல் அதிகாலை முதலே அலப்பறையை தொடங்கிய ரசிகர்கள், ரஜினியின் கட் அவுட்டுக்கு மாலை அணிவித்தும், அதன் முன்பு ஆட்டம் போட்டும் ஜெயிலர் படத்தை கொண்டாடி வருகின்றனர். பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் இருந்தே மிகப் பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது.


 ரஜினி ரசிகர்கள் ஜெயிலர் படத்தை கொண்டாடி வருகின்றனர். அதேநேரம் ஜெயிலர் படத்தில் ரஜினியில் ப்ளாஷ்பேக் காட்சிகள் செம்மையாக வந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். முதல் பாதியில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வரும் ரஜினி, ப்ளாஷ்பேக்கில் இன்னும் செம்ம மாஸ் காட்டியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். 


இப்படியான நிலையில் பிரபலங்கள் பலரும் இப்படத்தினைப் பார்த்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஷாருகானிடம் ஜெயிலர் படத்தை பார்ப்பீங்களா என்று கேட்ட போது கண்டிப்பாக ஜெயிலர் பார்ப்பேன். எனக் ரஜினியைப் பிடிக்கும் மாஸ்,ஜவான் படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்கு வந்து எங்கரள ஆசீர்வதித்தார்  என்றும் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement