• Jan 15 2025

'கூலி' ஆட்டம் நாளைக்கு ஆரம்பமா? லோகேஷ் கனகராஜ் போட்ட ட்விட்... ரசிகர்கள் கொண்டாட்டம்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் திரைப்படம் தான் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது. இதற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

ஜெய்லர் படத்தின் வெற்றிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 ஆவது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் வேட்டையன். இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படம் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பலமொழிகளிலும் பான் இந்திய திரைப்படமாக உருவாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 10 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகின்றார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, மகேந்திரன் போன்ற நடிகர்கள் நடிக்கின்றார்கள். இதற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படம் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், கூலி படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள்  குறித்த அறிவிப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளார்கள்.

Advertisement

Advertisement