• Jun 24 2025

கர்நாடகாவில் "தக் லைஃப்" படத்திற்கு தடை! நீதிமன்றத்தில் ஜூன்-14 கமலுக்கு நீதி கிடைக்குமா?

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் முக்கியமான கலைஞர்களில் ஒருவராக திகழும் கமல்ஹாசன், தனது புதிய படமான "தக் லைஃப்" திரைப்படத்தின் மூலம் தற்போது மீண்டும் திரையில் ரசிகர்களை சந்தித்துள்ளார். ஆனால் இந்தப் படத்திற்கு கர்நாடகா மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதோடு, தற்போது அந்த மாநிலத்தில் இப்படம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ள நிலை நிலவுகின்றது.


இந்த தடையை எதிர்த்து, கமல் ஹாசன் தரப்பு மேல் முறையீடு செய்துள்ளதோடு, இந்த மேன்முறையீட்டு மனுவை வருகின்ற வெள்ளிக்கிழமை (ஜூன் 14) அன்று கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரிக்க எடுத்துக்கொள்கிறது.

ஜூன் 5, 2025 அன்று "தக் லைஃப்" திரைப்படம் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் வெற்றிகரமாக வெளியானது. ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகியிருந்த இந்தப் படம், அரசியல், புரட்சி சிந்தனைகள், மற்றும் சமூக விமர்சனங்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா உயர்நீதிமன்ற விசாரணையின் முடிவைத் தான் தற்போது தமிழ், கன்னடம் மற்றும் இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

Advertisement

Advertisement