• Jun 24 2025

ரவி மோகன் - எஸ்.ஜே.சூர்யா இணையும் அதிரடி ஆக்சன்..! டைட்டிலை வெளியிட்ட படக்குழு.!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் ரவி மோகன். 'ஜெயம்', 'தனி ஒருவன்' மற்றும் 'அகிலன்' போன்ற வித்தியாசமான கதைகளில் நடித்ததன் மூலம், சிறப்பு நடிகராக வலம் வருபவர்.


இப்போது அவர் தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், புதிய ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கும் இந்தப் படத்திற்கு "BroCode" (ப்ரோகோட்) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சமீபத்தில் தொழில்துறையினர் மற்றும் ஊடகங்களில் பரவிய தகவல்களின் படி, ரவி மோகனின் புதிய படத்திற்கு "BroCode" என பெயரிடப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் நண்பர்களுக்கிடையேயான உறவையும், ஆண் தோழமையின் மனநிலையையும் மையமாகக் கொண்ட கதைக்களம் இது என கூறப்படுகின்றது.


ஆழமான உளவியல் வேடங்கள், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் எஸ்.ஜே.சூர்யா, இந்த ‘BroCode’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. இவர் இப்படத்தில் ஒரு வில்லனா? அல்லது திடுக்கிடும் இரட்டை வேடமா? என்ற விபரங்களை படக்குழு இன்னும் வெளியிடவில்லை. ஆனால் அவருடைய தனித்துவமான நடிப்பு படத்தின் முக்கிய களமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Advertisement

Advertisement