• Oct 23 2024

தலைவர் 171 திரைப்படம் தான் ரஜனியின் கடைசிப் படமா? உண்மையை உடைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

ரஜினி தன்னுடைய 171 ஆவது படத்தினை லோகேஷ் கனகராஜுடன் இணைந்து  பண்ண இருக்கிறார். லியோ படத்தின் பிரமோஷனுக்காக அவர் நிறைய பேட்டிகளில் கலந்து காெள்கிறார். அதில் அவர் பின்வருமாறு ரஜினி படம் பற்றி கூறியிருந்தார்.


லியோ படபிடிப்பில் இருக்கும்போது ரஜினி தனக்கு ஒரு கதை பண்ணும்படி லாேகேஷிடம் கேட்டிருக்கின்றாரர்.முதலில் தன்னிடம் கதை இல்லை என்று சொன்ன லோகேஷ் பின்னர் கதை ஒன்றினை ரெடிபண்ணிக் கொண்டு ரஜனியை சந்தித்து இருக்கின்றார். கதையை கேட்ட ரஜினி  உடனே ஓகே சொல்லி இருக்கின்றார்.


தலைவர் 171 தான் ரஜனியின் கடைசிப்படம் என்பதில் உண்மை இல்லை. என சொல்லி இருக்கிறார். ரஜனியின் லிஸ்ட்டில் அடுத்தடுத்து  இயக்குனர்கள் இருக்கிறார்களாம். ரஜினியும் அடுத்து படம் பண்ணும் ஐடியாவில் தான் இருக்கின்றார். தலைவர் 171 பட வேலைகள் முடிந்த பிறகுதான் படத்தின் அப்டேட் கொடுக்க வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறார் எனவும் கூறியிருந்தார்.

Advertisement