• Sep 21 2024

லீலாவைக் கொன்றது யார்?- ஹேஸ்டேக் மூலம் கொலை திரைப்படத்தை ட்ரெண்டாக்கி வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி அடுத்ததாக இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.அந்த வகையில் இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து இயக்கி நடிக்கிறார்.

அக்னிச் சிறகுகள், காக்கி, தமிழரசன், மழை பிடிக்காத மனிதன், ரத்தம் ஆகிய திரைப்படங்கள் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. இவர் நடித்துள்ள கிரைம் திரில்லர் திரைப்படம் தான் கொலை. ந்த படத்தை விடியும் முன் புகழ் இயக்குநர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார். கொலை படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளதோடு மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் மோஷன் போஸ்டரில் படத்தில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வித்தியாசமான முறையில் படக்குழு அறிமுகப்படுத்தியது. மேலும் இறுதியாக "லீலாவை யார் கொன்றது" என்ற கேள்வியுடன் மோஷன் போஸ்டர் முடிந்தது. ஒரு அற்புதமான இசையில் பழைய எவர்க்ரீன் பாடலான புதிய பறவை படத்தில் வரும் பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலோடு அட்டகாசமாக இருந்தது.

க்ரைம் த்ரில்லர் ஜானரில் ஒரு கொலையை சுற்றி நகரும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. இந்த மோஷன் போஸ்டர் வெளியானதில் இருந்து லீலாவை யார் கொன்றது என ஹேஸ்டேக் சமூக வலை தளங்களில் டிரெண்டாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement